அனுராதபுரம் போன காணி உறுதிகள் திரும்புகின்றனவாம்!வடக்கு மாகாணத்தில உள்ள காணிகளின் ஆவணங்களை அனுராதபுர அலுவலகத்திற்கு மாற்றும் செயற்பாட்டை நிறுத்தவும் கொண்டு சென்ற காணிகளின் ஆவணங்களின் மீள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் கோரிக்கை விடுத்துள்ளாராம்.

இன்று கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட வாழ்வாதர குழுவின் யாழ், கிளிநொச்சி மாவட்ட கூட்டத்தொடர் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

அந்த கலந்துரையாடலின் போது யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் காணி ஆவணங்களை அனுராதபுரத்திற்கு மாற்றுவது தொடர்பான பிரச்சனை முன்வைக்கப்பட்டது.

அது தொடர்பில் உரிய அமைச்சரிடமும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடிய கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமே உடனடியாக கொண்டு சென்ற ஆவணங்களை மீள கொண்டுவருமாறும் இனி கொண்டு செல்வதை நிறுத்துமாறும் பணிப்பு விடுத்ததாக அங்கயன் தெரிவித்துள்ளார்.யாழ்.மாவட்ட செயலகத்திலிருந்து காணிகளின் ஆவணங்களை அனுராதபுர அலுவலகத்திற்கு மாற்றியமை தொடர்பான விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் அவ்வாறு ஆவணங்களை அனுராதபுரத்திற்கு மாற்றவேண்டாமென கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தீர்மானம் போட்ட டக்ளஸ் கூட்டத்தில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments