யாழ்.கல்வி வலய பாடசாலைகள் பூட்டு:யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் ஒரு வாரத்திற்கு மூடப்படுகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் வைரஸ் தொற்று நிலைமை அதிகரித்து வரும் நிலையில் யாழ். கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளையிலிருந்து ஒரு வாரத்துக்கு மூடப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே  திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் இன்று (28)சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவன் தோப்பூர்-பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் லேனுஜன் (15 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இரண்டு சிறுவர்களுடன் இத்திகுளம் குளத்துக்கு குளிக்கச் சென்றபோது குளித்துக் கொண்டிருந்த சிறுவனை முதலை இழுத்துச் சென்றதாகவும் இதனை அடுத்து; உடன்சென்ற சிறுவர்கள் வீட்டுக்குச் சென்று கூறியதையடுத்து அங்கு ஓடிச் சென்ற சிறுவனின் தந்தை தன்னுடைய மகனை முதலை இழுத்துச் செல்வதை அவதரித்ததாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
 No comments