கிழக்கில் சுமா-சாணக்கியனின் அல்லக்கை அணி!

 


யாழ்ப்பாணத்தில் தமிழரசுக்கட்சிக்கு சவப்பெட்டி தயாரித்து கடந்த தேர்தலுடன் ஆணி அடித்த எம்.ஏ.சுமந்திரன் தற்போது தனது கடையினை கிழக்கில் விரித்துள்ளார்.

குறிப்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் ஒட்டிக்கொண்டு கதாநாயகனான சாணக்கியனை வைத்தே தனது அடுத்த அரசியல் என சுமந்திரன் உறுதியாக நம்புகின்றார்.

அடுத்த மாகாணசபை தேர்தலில் வடமாகாணசபையில் மாவை களமிறங்கவுள்ள நிலையில் தனது தரப்பின் கைகளை ஓங்க வைக்க மாவை முன்னின்று செயற்பட்டுவருகின்றார்.

ஆனாலும் மாவை களமிறங்கினால் வேட்பாளர்களாக தமது அல்லக்கைகளையே களமிறங்க அனுமதிக்கவேண்டுமென சிறீதரன் தனது பங்கிற்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இதே நிலைப்பாட்டுடன் நாடாளுமன்ற தேர்தலுடன் சோர்ந்து போயுள்ள தனது அல்லக்கைளிற்கு புத்துயிர் ஊட்ட சுமந்திரன் முற்பட்டுள்ளார்.

ஆனாலும் அது வெற்றி பெற்றிராத நிலையில் தற்போது கிழக்கை நோக்கி தனது கவனத்தை அவர் திருப்பியுள்ளார்.

கிழக்கின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க சாணக்கியன் ஆர்வமாகவுள்ள நிலையில் அங்கும் தமது ஆதரவு அல்லக்கைகள் அணியினை தோற்றுவிக்க சுமந்திரன் -சாணக்கியன் அணி மும்முரமாகியுள்ளது. No comments