பிரியங்க பெர்னாண்டோவை விடுவித்தது பிரித்தானிய உயர் நீதிமன்றம்!!


பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவை குற்றச்சாட்டுகளில் இருந்து பிரித்தானிய மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

குறித்த தகவலை பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 2018 ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்களை நோக்கி கழுத்தை அறுப்பேன் என சைகை மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து  மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், பிரித்தானிய மேல் நீதிமன்றம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்துள்ளது. இதனை பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

No comments