ஐஸ்லாந்தில் வெடித்தது எரிமலை!!


ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்காவிக் நகருக்கு தென்மேற்கில் ஒரு எரிமலை வெடித்ததாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள ஃபக்ரடால்ஸ்ஃபாலில் வெடித்த எரிமைலையில் பிளவின் நீளம் சுமார் 500 மீற்றர் தொடக்கம் 700 மீற்றர் நீளம் வரை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கடைசியாக எரிமலை வெடித்தது ஏறத்தாள 800 ஆண்டுகளுக்கு முன்பு எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த எரிமைலை வெடிப்பால் இரவு நேரம் பகல் போன்று வெளிச்சம் ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்லாந்தில் கடந்த மூன்று வாரங்களில் 40,000 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2010 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தில் மற்றொரு எரிமலை வெடித்ததில் ஐரோப்பா முழுவதும் விமான போக்குவரத்தை நிறுத்தியிருந்தது.

இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பால் அதிக சாம்பல் அல்லது புகை வெளியேற்றும் என எதிர் பார்க்கப்படவில்லை. இதனால் விமான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments