மாகாண சபைத் தேர்தல்:இந்தியா அலட்ட தேவையில்லை மாகாண சபைத் தேர்தல் குறித்து இந்தியா ஆலோசனை வழங்க வேண்டிய தேவை எமக்கு கிடையாதென இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மருதானையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது விதுர விக்ரமநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “மாகாண சபைத் தேர்தல் நாட்டுக்கு அவசியமற்ற ஒன்றாகவே பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்.

மேலும் மாகாண சபைத் தேர்தல் குறித்து எமது நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். மாறாக இந்தியாவிடம் ஆலோசனை பெறுவது அவசியமற்ற ஒன்றாகும்

இதேவேளை இந்த மாகாண சபைத் தேர்தலில் பல குறைப்பாடுகள் காணப்படுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments