கொடிகாமம் தொடர்ந்தும் முடக்கத்தில்!



இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை மேலும் 182 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 84 ஆயிரத்து 612 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணத்தின்  முன்னணி சந்தைகளுள் ஒன்றான கொடிகாமம் சந்தை கொரோனா அச்சத்தால் குறைந்த வியாபாரிகளுடன் வெறிச்சோடியுள்ளது. 

கொரோனா தொற்றாளர் ஒருவர் சந்தையில் கண்டறயிப்பட்டதையடுத்து கடந்த முதலாம் திகதி ஏனைய வியாபாரிகளிடம் பரிசோதனைக்கான மாதிரிகள் பெற திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் போதிய ஒத்துழைப்பு வழங்காமையினால் 80 சதவீதமானோருக்கு பரிசோதனை மாதிரிகள் பெற்றுக் கொள்ள முடியவில்லை என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளர்.

முதற் கட்டம் வியாபாரிகள் சிலரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் வியாபாரி ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து சந்தை வளாகம் தொற்று நீக்கம் செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமையிலிருந்து மீள வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் கொரொனா பரிசோதனைக்கு உட்ப்பட்டவர்கள் மாத்திரமே வியாபார நடவடிக்கைகாக அனுமதிக்கப்பட்டனர்.

பரிசோதனைக்கு உட்படாத வியாபாரிகள் சந்தைக்குள் அனுமதிக்கப்படவில்லை, இதனால் பரிசோதனைக்குள்ளான ஆறு வரையான வியாபாரிகளே வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டனர், கொரோனா தொற்றுக்காரணமாக பயப்பீதியில் நுகர்வோரும் ஒரு சிலரே வந்து சென்றனர். இதனால் வெறிச்சோடி சந்தை காணப்பட்டது.


No comments