இரு கொரோனா உடலங்கள் புதைப்பு! இறக்காமம், ஓட்டமாவடி தெரிவு!


கொவிட்- 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் இஸ்லாமியரின் உடலங்களை மட்டக்களப்பில் ஓட்டமாவடியிலும் மற்றும் அம்பாறையில்  இறக்காமம் பகுதியிலும் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

நிபுணர் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களை புதைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்ததுடன், அதற்கான சுகாதார வழிகாட்டல்களும் நேற்று வெளியாகியிருந்தது.

அதற்கமைய, ஓட்டமாவடி – மஜ்மா நகரிலுள்ள காணியில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதுடன் சரீரங்களை இன்று புதைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேநேரம் கொவிட்- 19 தொற்றினால் மரணித்த இருவரின் இஸ்லாமிய உடலங்கள் மட்டக்களப்பு மாவட்டம்  ஓட்டமாவடி  சூடுபத்தினசேனை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் மூன்று சரீரங்களை புதைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments