முதல்வர் தனிமைப்படுத்தலில்:யாழ்.மாநகரசபை கூட்டம் ஒத்திவைப்பு!



கொரோனா தொற்று உறுதியாகிய ஒருவர் கலந்துகொண்ட திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட வகையில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சுய தனிமைப்படுத்தப்படுத்திக்கொண்டுள்ளார்.

கடந்த 20ம் திகதி நெல்லியடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில்  பங்கெடுத்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து  நான் என்னை உடனடியாக சுய தனிமைபடுத்தி கொள்வதோடு பரிசோதனையும் செய்துகொண்டேன். என்னோடு இக்காலப் பகுதியில் தொடர்பு கொண்ட நபர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுகொள்கின்றேன். இன்றைய தினம் நடைபெறவிருந்த மாநகரசபையின் விசேட கூட்டம் இரத்து செய்யப்படுகின்றது என்பதையும் அறிய தருகின்றேன் என அறிவித்துள்ளார் வி.மணிவண்ணன்.

No comments