யாழில் இணைய காணொளி வலைப்பின்னல் பணியாளர் கைது!யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் தமிழ் இணைய காணொளி வலைப்பின்னல் ஒன்றின் பணியாளர் ஒருவர் இன்று காலை கைதாகியுள்ளார்.நீதிமன்ற அனுமதியுடன் சிவில் உடையில் வருகை தந்திருந்த காவல்துறையினர் அவரை கைது செய்து கொண்டுள்ளனர்.

புலம்பெயர் தமிழ் தரப்பொன்றின் பின்னணியில் செயற்பட்டு வந்த ரியூப்தமிழ் எனும் இணைய பணிப்பாளரான யுவதியொருவரே கைதாகியுள்ளார்.

இதனிடையே நல்லூரில் இருந்துவரும் ஆவா குழு அருணுடன் முரண்பட்ட குறித்த யுவதி அவரை துரோகியென திட்டித்தீர்த்த பின்வெளியேறியிருந்தார்.

இந்நிலையில் கைதுக்கான காரணம் தெரியாத போதும் பின்னணி தொடர்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.


No comments