கிளிநொச்சி கெத்து:திருப்ப அனுப்பப்பட்ட தொல்லியல்!கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில்  தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் இன்று புதன்கிழமை அகழ்வாராச்சியை மேற்கொள்ள முன்னெடுத்த நடவடிக்கையினை  பொது மக்கள்  தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் திரும்பியுள்ளனர். 

கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரரீஸ்வரர் சிவன் கோயில் பகுதியில் தொல்லியல் தினைக்களம் அகழ்வுகளை மேற்கொள்ள உள்ள நிலையில் அதனை எதிர்த்து  மக்கள் போராட்டத்தினை மேற்கொண்டனர்.

யாழ் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தொல்லியல் திணைக்களம் இணைந்து வருகை தந்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள முயற்சித்த போது, மக்களின் பலத்த எதிர்ப்பை அடுத்து அவ்விடத்திலிருந்து அன்று சென்றனர். 

அத்துடன் தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டையடுத்து வருகை தந்திருந்த பொலீஸார் அங்கிருந்த இரண்டு தரப்பினரிடமும் வாக்குமூலங்களை பதிவுசெய்திருந்தனர்.
No comments