பிரித்தானியாவில் ஆகஸ்ட் மாதத்தில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி!!


பிரித்தானிய அரசாங்க திட்டங்களின் கீழ் ஆகஸ்ட் மாதத்திலிருந்தே குழந்தைகள் கொவிட் தடுப்பூசி பெற ஆரம்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு  தடுப்பூசி ஏற்றப்படும். திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னனே வழங்கப்படும் என பிரித்தானியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் சமீபத்திய தரவுகளின்படி, மார்ச் 22 வரை 28,327,873 பெரியவர்கள் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றனர். அதே நேரத்தில் 2,363,684 பேருக்கு இரண்டாவது மருந்து வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை மாத இறுதிக்குள் அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசி போடுவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் ஒரு வாரத்திற்கு சுமார் மூன்று மில்லியன் முதல் தடுப்பூசி வீதம் வழங்கப்பட்டால், 11 மில்லியனுக்கும் அதிகமான பள்ளி மாணவர்களுக்கு இலையுதிர்கால காலத்திற்கு முன்பே தடுப்பூசி போட முடியும் என்று த டெலிகிராப் தெரிவித்துள்ளது.


No comments