தீவிரவாதத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் கைது!கண்டி, மாவனெல்ல பகுதியில் தீவிரவாதத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் 44 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இவர் கடந்த டிசெம்பர் 5 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்தபோது, அவரது நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டதாகவும், தீவிரவாதத்தை ஊக்குவிப்பதற்காக அவர் நன்கொடைகள் மற்றும் நிதிகளைச் சேகரித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கைதான நபரிடமிருந்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மடிக் கணனியொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணையில் சந்தேக நபரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் உறவினருடன் அவர் தொடர்புபட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments