துரத்தி பிடித்ததாம் இலங்கை காவல்துறை!

 


கொலைகார்கள்,கொள்ளைகாரர்களை கைது செய்கின்றரோ இல்லையோ தம்மை தாக்கிய இருவரை ஓரிரு மணித்தியாலத்துள் கைது செய்துள்ளர் இலங்கை காவல்துறையினர்.

உறவினர்களுக்கு இடையே இடம்பெற்ற முறுகல் நிலையை விசாரணை செய்வதற்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மீது தாக்குதல்  இன்று காலை யாழ்ப்பாணம் திருநகரில் தாக்குதல் நடந்துள்ளது.

அதனையடுத்து திருநகருக்கு பெருமளவு பொலிஸார் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

தாக்குதல் நடத்திய சகோதரர்கள் இருவரும் நாவற்குழி பகுதிக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சகோதர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் மாநகர சபை ஊழியர்.திருநகரில் நேற்றிரவு குடும்ப உறவினர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் துவிச்சக்கர வண்டி ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் 119 அவசர பொலிஸ் முறைப்பாட்டுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுக்கச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும் தப்பி சென்றிருந்த இருவரும் நாவற்குழியில் கைதாகியுள்ளனர்.


No comments