மட்டக்களப்பில் 4வது நாளாகத் தொடரும் போராட்டம்


மட்டக்களப்பில் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டம் இன்று 4வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான இப் போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பலக்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட அரசியற் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை நல்கி வருகின்றனர்.

வடகிழக்கில் தமிழ் மக்கள் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி வருவதாகவும், ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டம் நிறைவுபெற்றதன் பின்னர் இந்த நாட்டில் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் நிலையுள்ளதாகவும், அதன் காரணமாக ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் சரியான முடிவினை எடுக்கவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இன்றைய மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருனாகரம் (ஜனா), கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments