மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி!


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை காவல்துறைச் சாவடி பகுதியில்  இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில்  இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுள்ளார் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஓட்டமாவடியில் இருந்து கொழும்பு நோக்கி மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் புத்தளத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி தேங்காய் ஏற்றி வந்த பட்டா வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் டிப்பர் வாகனம் குடை சாய்ந்துள்ளது. இவ்விபத்தின்போது டிப்பர் வாகன உதவியாளர் மரணமடைந்துள்ளதுடன், சாரதி காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் மீராவோடை எம்.பி.சி.எஸ் வீதி மீராமுகைதீன் முஹம்மது மன்சூர் (வயது-39) என தெரியவந்துள்ளது.

No comments