யாழில் 7வது நாளாகத் தொடரும் போராட்டம்!


இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கோரி நல்லூரில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 7வது நாளாகத் தொடர்கின்றது. 

இன்றைய போராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று சனிக்கிழமை (6) இணைந்து ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர் என்பது நினைவூட்டத்தக்கது.

No comments