தொற்றுநோய் அச்சுறுத்தலையும் கடும் குளிரையும் வென்றபடி பயணிக்கும் மனிதநேயப் போராளிகளுக்கு வாழ்த்துக்கள்.


எமது மக்களுக்கு ஏற்பட்ட இன அழிப்புக்கு நீதி கேட்டு அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முன்றலில் இருந்து ஐ. நா சபையினை நோக்கி ஆறாவது நாளாக எமது மனிதநேய செயற்பாட்டாளர்கள் உணர்வோடும் உறுதியோடும் பயணிக்கின்றார்கள்.

ஒருபுறம் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் சார்ந்த சட்ட நடவடிக்கைகளைப் பேணுவதோடு மிகக் கடுமையான பனி படர்ந்த வீதிகளில் கடுங்குளிரையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கும் இந்தப் பயணம் வரலாற்றுப் பதிவாகும்.

கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக இம்முறை யேர்மனி ஊடாகப் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் எம்மால் முடிந்த வகையில் இந்த ஈருளிப்பயண அறவழிப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினையும் பங்களிப்பினையும் வழங்குவோம் என உறுதி அளித்து எமது மனிதநேய செயற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.No comments