மன்னாரை வந்தடைந்த #p2p பேரணி

பொத்துவில் தொடக்கம்  பொலிகண்டி வரையான தமிழர் பேரணி இன்று சனிக்கிழமை காலை 7.45 ம‌ணி‌க்கு வவுனியா புதிய பேருந்து நிலையத்தின்

முன்பு  ஆரம்பமாகிய  நடைபவனியானது வவுனியா நகரின் ஊடாக மன்னாரை நோக்கி சென்றடைந்துள்ளது.  

காலை 9.00 மணிக்கு பண்டார வன்னியின் சிலை அருகே வாகன பேரணியாக புறப்பட்டு  பட்டாணிச்சூர் முஸ்லிம் மகா  வித்தியாலயத்தின் முன்பாக நடைபவனியாகச்சென்று  நெளுக்குளம்,  புவரசக்குளம் ஆகிய பகுதிகளை கடந்து மன்னார்  பரையநாளன் குளம் வீதியைச் சென்றடைந்துள்ளது.  

அதனைத் தொடர்ந்து 12 மணியளவில் மடுவீதியை சென்றடைந்து குறித்த ஊர்வலம் மடுவ சந்தியிலிருந்து முருங்கன் ஊடாக மன்னரை சென்றது.

குறித்த ஊர்வலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சர்வமதத் தலைவர்கள் உள்ளடங்கலாக இளைஞர்களும், முஸ்லீம் மக்களும் ஊர்வலத்தில் கைகோர்த்துள்ளனர்.

பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டபோதும்  சோதனைச் சாவடிகளை தகர்த்தெரிந்து குறித்த ஊர்வலம் மன்னார் நோக்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

No comments