நம்பிக்கை ஒளி

நான் பறக்கத் துடிக்கிறேன்...
என்னால் முடியவில்லை,

என் கைகளுகம், கால்களும்
பிணைக்கப்பட்டு,
சிரசிலே முள்முடி தரிக்க
நிர்பந்திக்கப்பட்டுள்ளேன்.

என் முழுச்சக்தியையும் திரட்டி
நான் பறக்கத் துடிக்கிறேன்
என்னால் முடியவில்லை

ஒடுக்கு முறைகள் என்
குரல்வளையை நெரிக்கின்றன.
மூடநம்பிக்கைகளோடு என் மேனிமீது
பாம்புகளாய் நெளிகின்றன.
சாக்கடை நாற்றத்தை விஞ்சிய
துர்வாடை என் நாசிகளை
மூச்சு முட்ட முனைகின்றது.

ஆனாலும்,
என்னுள் முகை கொண்டுள்ள
அசைக்கவியலாத ஒளி பொருந்திய
நம்பிக்கை மீது மட்டும்
ஆணியறைந்திட
எவற்றாலும் முடியவி;ல்லை.

ஆக்கம் - செந்தமிழ் (போராளி)

No comments