புடம்

காட்டில் இருந்த மூங்கில் ஒருநாள் கத்தியால் வெட்டப்பட்டது. நெருப்புக் கம்பி தன்னைத் துளைத்தபோது ஐயோ உடல் புண்ணாகிறதே. என்று கதறி அழுதது.
 
கொஞ்சம் பொறுமையாக இருஎன்று மூங்கிலைப் பார்த்து ஆறுதல் சொன்னது காற்று. மூங்கில் புல்லாங்குழல் ஆனது.மேடையில்..

உலகமே மயங்கும் இசையை அள்ளிப் பொழிந்து கொண்டிருந்த புல்லாங்குழலைப் பார்த்து மேனி சிலிர்த்தது காற்று. அது சொன்னது புண்பட்டவன்பண்பட்டவன்

ஆக்கம் - உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன்

No comments