சிகையலங்கரிப்பு நிலைய உரிமையாளருக்கு கொரோனா!

மன்னார் நகரில் சிகையலங்கரிப்பு நிலைய உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 291 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 426 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இவர் மன்னார் நகரில் சிகையலங்கரிப்பு நிலையம் நடத்துபவர்.

இதனால் அந்த சிகையலங்கரிப்பு நிலையத்துக்கு கடந்த சில நாள்களாக சென்றோர் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் அடையாளப்படுத்தப்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.

No comments