ஆவா அருணுக்காக காந்திருந்த சுவிஸ் தூதர்!

 


இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலர் மற்றும் குழுவினர் இன்றையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போது ஆவா குழு அருண் தரப்பு ஆர்ப்பாட்டத்தில் குதிக்கப்போவதாக தகவல் பரவியதையடுத்து பரபரப்பு தொற்றிக்கொண்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன்,சார்ள்ஸ் நிர்மலநாதன்,மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை யாழ்பாணத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக இரவு உணவுடன் கலந்துரையாடினர்.அப்போதே ஆவா அருணிண் ஆர்ப்பாட்ட தகவல் வந்திருந்ததையடுத்து பரபரப்பு தொற்றிக்கொண்டது.

எனினும் அவ்வாறு ஆர்ப்பாட்டமெதுவும் நடந்திராத நிலையில் அமைதியாக சந்திப்பு முடிந்திருந்தது.


No comments