இலங்கையில் கொரோனாவுக்கு முதல் மருத்துவர் பலி!


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 32 வயதான இளம் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி, கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவர்  ஒருவர் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று (2) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த மருத்துவர்  32 வயதுடைய, கயான் தன்தநாராயன ஆவார்.

இவர் ராகம வைத்தியசாலையில் கடமையாற்றிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் உயிரிழந்த முதல் மருத்துவர்  இவராவார்.

இதனை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments