குடைச்சல் கொடுக்கிறது காவல்துறை!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கெடுத்தவர்கள் தொடர்பில் இலங்கை காவல்துறை நெருக்கடிகளை கொடுக்க தொடங்கியுள்ளது.

முல்லைதீவினில் பேரணியில் இணைந்து கொண்டவர்கள் தொடர்பாக இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் புதிய அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவுப் காவல்துறையினரால்; ஏற்கனவே தடையுத்தரவு பெறப்பட்டிருந்த வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய அறிக்கையிலான வழக்குகள் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தை நடாத்திய நபர்களிற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற எல்லைக்குள் பேரணியில் பங்கு பற்றமுடியாது, பேரணியை முன்னெடுக்க முடியாது என தடை கோரி தடையுத்தரவை இலங்கை காவல்துறை பெற்றிருந்த நிலையில் கடந்த 5ஆம் திகதி பேரணி முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் நுழைந்திருந்தது.

அதேபோன்று மன்னார் மாவட்டத்திலும் பருத்தித்துறையிலும் நீதிமன்ற தடைகள் பெறப்பட்டிருந்தது.

ஆயினும் தடைகளை தாண்டி பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.


No comments