அடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்

மயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  கோ.கருணாகரம்,இரா. சாணக்கியன் ஆகியோர் கூட்டாக தாக்கல் செய்த எழுத்தாணை மனு நேற்று (23/02/2021) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன்  முன்னிலையானார்.

குறித்த விடயம் தொடர்பாக பண்ணையாளர்களுக்கு எதிராக உள்ள நபர்கள் வரும் 28ம் திகதியுடன் வெளியேறிவிடுவார்கள் என அரச தரப்பு சட்டத்தரணியால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு எதிர்வரும் 2021,மே, 12ம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.!


No comments