பாகிஸ்தானுடன் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் நேற்று (23.02.2021) அலரிமாளிகையில் வைத்து கையெழுத்திடப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இலங்கை - பாகிஸ்தானுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் கீழே.

1. சுற்றுலா ஒத்துழைப்பு தொடர்பான பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

2. இலங்கை மற்றும் பாகிஸ்தான் முதலீட்டு வாரியத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

3. இலங்கையின் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ITI) மற்றும் பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

4. கொழும்பின் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத்தின் (COMSATS) பல்கலைக்கழகத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு.

5. கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் பாகிஸ்தானின் லாகூர் பொருளாதாரக் கல்லூரிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

No comments