மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி பூட்டு!


குடாநாட்டில் பாடசாலை ஆசிரியைகள் தொடர்ந்து கொரோனா பாதிப்பிற்குள்ளாகிவருகின்றர்.

இன்றைய தினமும் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி ஆசிரியையின் தாயாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து ஆசிரியை தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக முன் எச்சரிக்கையாக பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும் கொரோனா தொற்றுட் ஆசிரியை கண்டறியப்பட்டதை தொடர்ந்து  கற்றல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் தனியார் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

No comments