தமிழ் இளைஞர் கால்கள் உறுதியானவை:ரவிகரன்!எமது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் அமைதியான முறையிலே பிறருக்கு இடையூறுகள் ஏற்படுத்தாவண்ணம் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெற்ற பேரணியில் பங்கேற்றேன்.அதேவேளை பொதுமக்கள் அனைவரும் திரண்டுவந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில், தானும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக வாக்கு மூலத்தில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெற்ற பேரணியில் பங்கேற்றமை தொடர்பில் இலங்கை காவல்துறையினர் இன்று ரவிகரனிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றிருந்தனர்.

இதனிடையே வடக்கு, கிழக்குக்கு வரும் போது, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வர் பாதுகாப்பின்றி வருவதை தவிர்த்துக்கொள்ளவேண்டுமென துரைராஜா ரவிகரன் தெரிவித்துள்ளார். 

வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களைப் பற்றியோ, இளைஞர்களைப்பற்றியோ மேர்வின் சிலவா பூரணமாக புரிந்துகொள்ளவில்லையெனவும், அவர் தெரிவித்துள்ளார். 

போராட்டத்தில் பங்குபற்றியவர்களின் கால்களை தான் உடைத்திருப்பேன் என மேர்வின் சில்வாவுக்கு அவ்வாறு உடைக்கக்கூடிய நிலையில் தமிழர்களின் கால்கள் இல்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும் எனவும் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
No comments