வடக்கில் ஆறு!







இலங்கையில் புதிய வகை கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள 16 பேரில் 13 பேர், இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வடமாகாணத்திலுள்ள பம்பைமடு, முழங்காவில்  ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனிடையே வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவர் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 416 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆவர்களுள் 5 பேர் மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடையோர் என்ற அடிப்படையில் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள்.

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


No comments