ஒரு நாள் தாமதமாக வருகின்றது பேரணி?பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


எதிர்வரும் ஆறாம் திகதி யாழ்ப்பாணத்தில் பொலிகண்டியுடன் பேரணியை முடிப்பதற்கு முன்னர் திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது ஏழாம் திகதியே யாழ்ப்பாணத்தை போராட்டம் வந்தடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


வடக்கில், முல்லைதீவு,புதுக்குடியிருப்பு,நெடுங்கேணி,வவுனியா,மன்னார் ஊடாக னர் யாழ்ப்பாணத்திற்கு வருவதாக முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.


எனினும், கிளிநொச்சியில் போராட்டத்தை முன்னெடுத்துவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க கோரிக்கையையடுத்து, கிளிநொச்சி ஊடாக பேரணி பயணிக்க ஏற்பாடாகியுள்ளது.


இதன்படி, வரும் 7ஆம் திகதி பேரணி யாழ்ப்பாணத்தை சென்றடையும்  என தகவல்கள் வெளியாகியுள்ளன.


No comments