கொரோனாவது கூந்தலாவது!தென்னிலங்கையில் செத்த பாம்பு நிலையினை அடைந்துள்ள சிறீPலங்கா சுதந்திர கட்சிக்கு யாழில் உயிரூட்ட களமிறங்கியுள்ளார் அங்கயன் இராமநாதன்.

தென்னிலங்கை இனவாத அமைச்சரான தயாசிறி ஜயசேகர சகிதம் கட்சியின் மாநாட்டை யாழ் .வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடத்தியுள்ளார்.கொரோனா ,சமூக இடைவெளி அனைத்தினையும் மூலையில் தூக்கி வீசிவிட்டு பத்திக், கைத்தறி உற்பத்தி, உள்நாட்டு ஆடை உற்பத்தி  இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்றிருந்த நிகழ்விற்கு ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் தருவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செத்த பாம்பு நிலையினை அடைந்துள்ள சிறீPலங்கா சுதந்திர கட்சியிலிருந்து உண்ணி போல பலரும் கலைந்து செல்லும் நிலையில் அங்கயன் கூத்து அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.


No comments