பேரணி மீது தாக்குதல்:வீதிகளில் முட்கம்பிகள்?
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவனியை அச்சுறுத்தி முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பயணிக்கின்ற வாகனங்கள் தொடர்ந்து பயணிக்காத வண்ணம் வீதிகளில் ஆணிகள் மற்றும் முட்கம்பிகளை பதித்து தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.இதனால் வாகன ரயர்கள் சேதமடைந்த நிலையில் பயணம் தாமதமடைந்துள்ளது.

முன்னதாக பயணித்த வாகனங்கள் மீது திருகோணமலைப் பகுதியில் வைத்து சிலர் தாக்குத்தல் மேற்கொள்ள முயற்சித்ததாக தெரியவருகின்றது.
திருகோணமலை - மடத்தடிச் சந்திப் பகுதியில் வைத்தே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று மூன்றாவது நாளாக திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், பேரணியில் பொலிஸார் கலந்துகொண்டிருந்த போதும் தாக்குத்தல் நடத்தப்பட்டுள்ளதுடன், இத் தாக்குதலில் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments