கண்காணிக்கின்றது புலனாய்வு துறை?

 


மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டத்திற்குள் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற போர்வையில் புலனாய்வு துறை ஊடுருவி வீடியோ பதிவுகளை பதிவு செய்து சென்றுள்ளனர்.

கூட்டம் நடைபெற்ற மட்டக்களப்பு அமெரிக்க மெசன் மண்டபத்திற்குள் பல்கலைக்கழக டீசேட் அணிந்து பல்கலைகழக மாணவர்கள் என்ற போர்வையில் இலங்கை புலனாய்வுத் துறையினர் ஊடுருவிய வீடியோ பதிவுகளை செய்ததுடன்.

கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களின் கருத்துக்களையும் பதிவு செய்து சென்றுள்ளனர்.

இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் கூட போராட முடியாத வகையில் அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்படுகிறது. எனவே வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகள் முன்னெடுக்கும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கு சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பு அவசியம் தேவைப்படுகிறது.

இந்த போராட்டத்தை முடக்குவதற்கு அரசு அனைத்து வழிகளிலும் முயன்று வருகிறது எனவே இதற்கான பாதுகாப்பை சிவில் சமூக அமைப்புகள் சர்வதேசத்திடம் கோரியுள்ளனர்.

No comments