கன்னியா வெந்நீருற்றினுள்ளும் கொரோனா?இந்துக்களினது புனித தீர்த்தமான கன்னியாவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு உட்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதிக்குள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள் உள்ளானவர்கள் அங்கு வந்துச்சென்றதாக, தகவல்கள் பரவியதை அடுத்தே, வெந்நீர் ஊற்றுப்பகுதிக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

'வெளிநபர்கள், உள்ளே செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது' என  பிரதான வாயிலின் கதவில் அறிவித்தல், ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதான வாயிலிலும் உள்ளேயும் உப்புவெளி பொலிஸார் காவல் கடமையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.

No comments