இலங்கையில் வேலையில்லை!

இலங்கையில் இவ்வருடம் 6 இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களுக்காக ஒவ்வொரு துறையில் இருந்தும் வெளியேறுவார்கள். அவர்களுக்குத்

தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என இலங்கையின் தொழில் வழங்கல் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எதிர்வரும் மாதங்கள் மிக நெருக்கடியான சூழ்நிலைகளை தோற்றுவிக்கும். மக்கள் மத்தியில் தொழிற்துறைக்கான கேள்வி அதிகளவில் ஏற்படும். இருப்பினும், தொழிற்துறையை ஊக்குவிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் நெருக்கடியான நிலையை எதிர்கொள்ள நேரிடும். நாட்டின் பல துறைகள் இன்னும் முழுமையாக மீளத் திறக்கப்படவில்லை.

எதிர்வரும் காலங்களுக்குத் தேவையான தொழில் வாய்ப்புக்களை உருவாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

செயல்திட்டங்களை பயனுடையதாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமானதாகும்.

2010ஆம் ஆண்டைக் காட்டிலும் 2020 ஆம் ஆண்டு வியாபாரத் தட்டுப்பாடு 2.0 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைவடைந்துள்ளது என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

No comments