லொக்குபண்டார மரணம்:வடக்கில் 17!

இலங்கையின் முன்னாள் சபாநாயக்கர் லொக்கு பண்டார கொரோh தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே வடக்கு மாகாணத்தில் இன்று கிளிநொச்சியைச் சேர்ந்த 10 பேர் உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட 379 பேரின் பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இவ்வாறு 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் கிளிநொச்சி மாவட்டத்தில் 10 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும்,மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும், வவுனியா தனிமைப்படுத்தல் நிலையங்களில் பேருக்கும் என 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூட தரப்பில் வெளியிடப்பட்ட நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments