தேசிய நலனுக்கு எதிர், பிபிசிக்கு தடை போட்டது சீனா!

 


விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக, பிபிசி செய்திச் சேவைக்கு தடை விதித்துள்ளது சீன ஒலிபரப்பு துறை  ஒழுங்குமுறை அமைப்பு.

சீனாவின் தேசிய நலனுக்கு எதிராக பிபிசி செய்திகளை வெளியிட்டதால், இந்த நடவடிக்க‍ை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“பிபிசி போன்ற மேற்கத்திய ஊடகங்கள், சீன அரசுக்கு எதிராக, புனையப்பட்ட செய்திகளின் மூலம் பொதுமக்களின் கருத்தை கட்டமைக்கின்றன.

பிபிசி நிறுவனம், பிராட்காஸ்டிங் விதிமுறைகளை அப்பட்டமாக மீறியுள்ளது. செய்திகளை, நேர்மையாக, உண்மையாக வெளியிடுவதற்கு பதிலாக, சீனாவின் தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வெளியிடுகிறது.

எனவே, சீனாவின் தேசிய திரைப்பட, தொலைக்காட்சி மற்றும் வானொலி நிர்வாகம், பிபிசி நிறுவனம், சீனாவில் தனது செய்தி சேவையை தொடர அனுமதிக்காது மற்றும் அந்நிறுவனத்தின் புதிய வருடாந்திர விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments