பாஜககவுக்கு படையெடுக்கும் தீவிர காங்கிரசார்!


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் இன்று (பிப்ரவரி 11) மாலை தமிழக பாஜக தலைவர் எல். முருகன், பொதுச் செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ராம்குமாரும், ராம்குமாரின் மகன் துஷ்யந்தும் பாஜகவில் சேர்ந்தனர்.

பாஜகவில் இணைந்த ராம்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தேசியமும் தெய்வீகமும் ஒன்று சேர்ந்து மக்களுக்கு எடுத்துக் காட்டியவர் சிவாஜி கணேசன். அந்த சித்தாந்தத்தை நாட்டில் முன்னின்று நடத்துபவர் மோடி. அதனால்தான் நான் பாஜகவில் இணைந்துகொண்டேன்.

இந்தியா என்ற தங்கக் கிளியை உலகத்துக்கு தெரியவைக்கும் பிரதமரின் கரத்தை வலுப்படுத்த ஒன்றாக சேருவோம். நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காமல் நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று கேட்க வேண்டும். அதைத்தான் மோடி செய்துகொண்டிருக்கிறார். பிரதமரின் தன்னிறைவு இந்தியா திட்டம் போன்ற பல திட்டங்கள் பலரையும் கவர்ந்திருக்கின்றன.

என் அப்பாவின் அரசியல் பாதை எப்படி என்று எல்லாருக்கும் தெரியும். என் வழி எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. மோடியின் வழிதான் என் வழி. நாங்கள் இங்கு சேர்ந்திருந்தாலும், எங்கள் ஆதரவாளர்கள் ஆங்காங்கே இன்று தமிழகம் முழுதும் பாஜகவில் சேர்ந்திருக்கிறார்கள். வருங்காலத்தில் தமிழகத்தில் தாமரை மலரும்” என்று கூறினார் ராம்குமார்.

“உங்கள் தந்தை காங்கிரஸ் தலைவராக இருந்தவர் . நீங்கள் பாஜகவில் சேர்ந்திருக்கிறீர்களே?”என்ற கேள்விக்கும் “என் தந்தை காங்கிரசில் இருந்து விலகிவிட்டாரே” என்று பதிலளித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான கராத்தே தியாகராஜனும் இன்று பாஜகவில் இணைந்துள்ளார் , ராஜனின் வரவுக்காக காத்திருந்து கடைசில் ரஜனி முடிவை மாற்றியதணல் விரக்தியில் இருந்த அவர் தற்போது நேர் எதிர் சித்தாந்தம் கொண்ட பாஜகவில் இணைந்திருப்பது வேடிகையகியுள்ளது.No comments