வீறுநடைபோடும் இரண்டாம் நாள் போராட்டம்!

தமிழ் இன அழிப்புக்கு எதிரான எழுச்சி பேரணி இன்று (04.02.2021) இரண்டாவது நாள் மட்டக்களப்பு தாளங்குடாவில் காலையில் ஆரம்பித்து ஆரையம்பதி,

காத்தான்குடி, கல்லடி ஊடாக மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்திறற்கு சென்று அங்கிருந்து திருகொணமலை வீதி ஊடாக ஏறாவூருக்கு சென்றடைந்துள்ளது. 

வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான எழுச்சி பேரணி இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பை வந்தடைந்தபோது அதில் பங்குபற்றுபவர்களுக்கு எதிராக நீதிமன்றில் எடுக்கப்பட்ட தடை உத்தவை பொலிசார் வழங்கி வைத்தனர். 

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரகுமார், சிறீதரன், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியேந்திரன், ஞா. சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார். தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதிநிதியான அருண்தம்பிமுத்து காணாமல் போன உறுவுகள் உட்பட பல் கலந்துகொண்டனர்.

No comments