வேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்!


தமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமிழர் கட்சி முதற்கட்டமாக 35 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது .

இந்த முறை தேர்தலில் பல கட்ட முனை போட்டிகள் நிலவும் என எதிர்ப்பார்க்கப்படும் சூழ்நிலையில் கூட்டணி அமைப்பதில் மும்முரமாக திராவிட கட்சிகள் ஈடுபட்டிருக்க தனித்து தான் போட்டியிடுகிறோம் 234 தொகுதிகளிலும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து இருந்தார் . இந்நிலையில் தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது . அக்கூட்டத்தில் முதற்கட்டமாக 35 தொகுதிக்களுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார் சீமான் . தஞ்சை , திருவாரூர் , நாகை , திருச்சி , மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . ஆண்களுக்கு , நிகராக பெண்களும் இத்தேர்தலில் களமிறங்குவார்கள் என முன்னரே சீமான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .

No comments