ஜோசப் பரராஜசிங்கத்தை தெரியாதென்கிறாரர் பிள்ளையான்?



எனக்கும் ஜோசப் பரராஜசிங்கம் கொலைக்கும் எவ்விதமான சம்மந்தமும் இல்லையென அழகான வெள்ளைப் பேப்பரால் கழுவி  நீதித்துறை என்னை விடுதலை செய்திருக்கின்றது” என தமிழ் மக்கள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். 

“ஜோசப் பரராஜசிங்கம் என்ற அந்த மனிதர் நள்ளிரவில் ஆராதனையில் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் தலைப்பிட்டு, செய்திகள் வெளியிட்டன. இப்போது இருக்கின்ற ஆண்டகைதான் அப்போதும் இருந்திருப்பார். அவரோ அல்லது ஆராதனையில் ஈடுபட்ட எவரும் என்னைக் கண்டார்களா?  எந்தவிதமான கண்ட, தொழில்நுட்ப, சாட்சிகள் இல்லாமல் என்னை சிறையில் அடைத்தார்கள். நான் குற்றமற்றவன். எந்தவிதமான களங்கமற்றவன். 


“தற்போது எதிர்க்கட்சியினர், பிள்ளையான் ஒரு குற்றவாளி. ஜனாதிபதியின் அதிகாரத்தில் விடுவித்ததாக ஒரு மாயையைத் தோற்றுவிக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நான்  ஜனாதிபதியையோ அல்லது பிரதமரையோ சந்தித்ததில்லை. இந்த வழக்கை கொண்டு நடத்தமுடியாது என எனக்குத் தெரியும். அதேபோல், என்னைக் கைதுசெய்த சிஐடிக்கும் அது தெரியும். 


“நான் சிறையில் இருந்து 54,000 விருப்பு வாக்குகளைப் பெற்றவன். வடக்கு, கிழக்கிலே எந்த தமிழரும் பெறாத வாக்குகளை மட்டக்களப்பு மக்கள் எனக்கு அளித்தார்கள். காரணம், இயல்பாகவே நான் மட்டக்களப்பில் பற்றுள்ளவன். இறுதிவரைக்கும் நிற்பேன் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கின்றது.


“அந்த நம்பிக்கையை நான் மக்களுக்காக செய்து காட்டுவேன். என்னுடைய உறுதித் தன்மையையும் மட்டக்களப்பு மீது நான் வைத்துள்ள பற்றையும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவை, மாகாண சபை முறமைதான் வேண்டும் என்கின்ற நிலைமையை நான் நடத்திகாட்டுவேன் என்று உறுதியாக இருக்கின்றேன்” என்றார்.

No comments