வவுனியாவில் ஒருவாரத்தில் மாத்திரம் 148 ?



வவுனியா வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டிருந்தது.

அவருடன் தொடர்புகளை பேணிய சில ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் முன்னெடுக்கப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில் இருவருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

குறித்த இருவருடன் வவுனியாவில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 148 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments