கடைகளுக்குள் பாய்ந்த உந்துருளி! நால்வர் படுகாயம்!

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி களுதாவாளை வீதி பிள்ளையார் ஆலயத்தடியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரு கடைகள்

சேதமடைந்துள்ளன. நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.

விபத்து களுதாவளை பிரதான வீதியில் அமையப் பெற்றுள்ள வீதிப்பிள்ளையார் ஆலயத்தினை அண்மித்ததாக அமையப் பெற்றுள்ள கடையை உடைத்துக் கொண்டே இடம் பெற்றுள்ளது.

மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த உந்துருளி வேகக் கட்டுப்பாட்டையிழந்து வீதியில் நடையில் பயணித்துக் கொண்டிருந்த நபருடன் மோதி வேகம் தணியாத நிலையில் கடையை உடைத்துக் கொண்டு உரிமையாளருடன் மோதியதனாலையே இவ் இபத்து இடம் பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேற்படி விபத்து சம்பவத்தில் இரண்டு கடைகள் சேதமடைந்ததுடன். உந்துருளியில் பயணித்த இருவர் உட்பட வீதியில் பயணித்த ஒருவரும் கடை உரிமையாளர் ஒருவருமாக மொத்தமாக நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில்  களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


No comments