குமுளமுனைப்பக்கம் சிங்களத்தின் கவனம்?குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் அமைந்துள்ள பகுதி நோக்கி மீண்டும் தெற்கி;ன கவனம் சென்றுள்ளது.

அப்பகுதியில் தொல்லியல் ஆய்வு  எனும் பேரில் இலங்கை தொல்லியல் திணைக்களம் ஆய்வு நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றது .நாளைய தினம் ஆய்வு பணிகள் இடம்பெறவுள்ளன . இதற்காக தெற்கில் இருந்து ஒரு அமைச்சர் வருகைதர இருக்கிறார் .

தொல்லியல் திணைக்களம் மட்டுமே ஆய்வு செய்யவேண்டிய இடத்தில இலங்கை இராணுவம் தமது கொடிகளை நாட்டி தொல்லியல் ஆய்வுக்கு ஆதரவு வழங்குகின்றது.

இந்த இடம் தொடர்பில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் 2018 இல்  பிறப்பிக்கபட்ட கட்டளை ஒன்றில் அங்கே உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான ஆலயத்தில் மக்கள் வழிபடலாம் என்றும் கட்டுமானங்களை  இரு சாராரும் செய்ய முடியாது  என்றும் தொல்லியல் திணைக்களம் மாத்திரம் ஆய்வுகளை செய்யலாம் என்றும் வேறு தரப்பினர் ஆய்வுகளை செய்ய முடியாது என்றும் கூறபட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இராணுவமே இங்கே தொல்லியல் ஆய்வுகளை செய்வதுபோல தமது கொடிகளை நாட்டி தொல்லியல் ஆய்வுக்கு வழி சமைத்துள்ளது. 


No comments