கோத்தாவின் தமிழன் பத்திரிகை?

 


தமிழ் மக்களை ஊடகங்கள் மூலம் மடக்க கோத்தா தரப்பு தமிழன் பேரில் பத்திரிகை ஆரம்பித்துள்ளது.இதில் முன்னணி போலி தமிழ் தேசிய ஊடக தம்பிகள் முகவர்களாகியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதன் ஆசிரியராக முன்னாள் முகவர் ஒருவரேயுள்ளார்.

2009 யுத்தம் நடந்த போது இராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் “அபி வெனுவென் அபி” எனும் பிரச்சார இயக்கத்தை முன்னின்று நடத்தியவரும்,- தற்போதைய கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளவரும், கோட்டபாய ராஜபக்சவின் தீவிர விசுவாசியுமான திலித் ஜெயவீர என்பவரே தமிழ் பத்திரிகை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பத்திரிகைக்கு “தமிழன்” என்று பெயர் வைத்து “தமிழ் மக்களின் கருத்துரிமை காவலன்” என அடிவாசகம் வைத்தெல்லாம் 2020 ஆம் ஆண்டின் கொடுமைகளில் ஒன்று என்கிறனர் அவதானிகள்.

தெரண தொலைக்காட்சி, அததெரண இணையத்தளமும் இவருக்கு சொந்தமானது தான் என தெரியவருகின்றது. 


No comments