கொரோனா போன பின்னரே தேர்தல்?


மக்களின் அடிப்படை உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்கும். கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என  இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முறைமையை அரசாங்கம் இரத்து செய்ய முயற்சிக்கிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு தவறானதாகும்.

மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு கூட்டமைப்பினர் பொறுப்புக் கூற வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தின் செயல்பாடுகள் அனைத்திலும் கூட்டமைப்பினர் பங்காளிகளாகச் செயல்பட்டுள்ளனர்.

இனப்பிரச்னைக்குத் தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

மாகாண சபை முறைமையை முழுமையாகச் செயல்படுத்த முடியாது.

மாகாண சபை முறைமையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில விடயங்கள் நாட்டின் அரச கட்டமைப்புக்கு பொருத்தமற்றதாக உள்ளது.

மாகாண சபை முறைமையில் உள்ள முரண்பாடற்ற வகையிலான விடயங்களை மாத்திரமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயல்படுத்தினார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தோல்வியடையும் என்பதை நன்கு அறிந்தும்கூட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆட்சிக்காலத்தில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது.

ஏனைய மாகாணங்களைக் காட்டிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு மாகாண சபை முறைமை அத்தியாவசியமான ஒன்று. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்தனர்.

நாம் வழங்கிய தேர்தல் உரிமையை நல்லாட்சி அரசாங்கம் பாதுகாக்கவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அடைந்த தோல்வி அச்சத்தால் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டது.

 மாகாண சபைத் தேர்தல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு அத்தியாவசிய தேர்தலாகக் காணப்படுகின்றது.

இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரதான எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு ஆதரவு வழங்கினர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் கூட்டமைப்பினர் துணை நின்றனர் எனத் தெரிவித்தார்.

No comments