செத்துப்போன யானைக்கு சிருங்காரமாம்?


ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு மறுத்துள்ளார் அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், நேற்று முன்தினம் (13) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில், பதவிநிலைகளில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டன. 

எனினும், இந்தச் செயற்குழுக் கூட்டத்தில், யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் பங்கேற்கவில்லை. 

ஐக்கிய தேசிய கட்சியின் பதவிநிலைகளில் அதிரடியான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதில், புதுமுகங்கள் பல உள்ளீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. பழையவர்கள் சிலர்,ஓரங்கட்டப்பட்டு உள்ளனர். இந்நிலையிலேயே, நவீன் திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அதில், பதில் பொதுச் செயலாளராகப் பதவி வகித்திருந்த ஷமல் சேனாரத்ன, கட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ஜூன ரணதுங்க, டி.எம். சுவாமிநாதன் ஆகியோர், கட்சியின் சிரேஷ்ட உப-தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.  

No comments