கிளிநொச்சியில் வெள்ளச்சேதம் அதிகம்?தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு கால போகம் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் சுமார் 20 வீதமான வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.அறுடைக்கு தயாராக இருந்த நிலையில், அதிகளவான மழை வீழ்ச்சியால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதனிடையே கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று வரை(14) 807 குடும்பங்களைச் சேர்ந்த 2600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த  முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. 


No comments