நிழல் கீரோக்கள்: மறுப்பக்கமோ இருட்டு?


படத்தில் காண்பவர்கள் தமிழ் திரைப்பட நடிகர்களோ அல்லது தொலைக்காட்சி தொடர் நடிகர்களோ என நீங்கள் நினைத்தால் தவறு.

அதிலும் கூட இணைந்து நிற்கின்ற யுவதி கதாநாயகியென்றால் அது கூட உச்ச கற்பனையாகலாம்.


யாழ்ப்பாணத்தில் பட்டபகலில் வீதியால் பயணிக்கின்ற பெண்களின் தாலிகளை அறுப்பதும் பின்னர் அதனை விற்றபின்னராக ராஜவாழ்க்கை வாழ்வதுமான பருத்தித்துறை தும்பளை பகுதியை சேர்ந்த கும்பலொன்றின் வாழ்வியலே இது .

அண்மையில் பருத்தித்துறை வீதியில் நீர்வேலிப்பகுதியில் பட்டப்பகலில் வீதியால் பயணித்த பெண்ணொருவது தாலி அறுத்தெடுக்கப்பட்டிருந்தது.


இதனால் விழித்துக்கொண்ட  இளைஞர்கள் குழுவொன்று வீதியில் பொருத்தப்பட்ட கமரா காணொலி காட்சிகளின் அடிப்படையில் நடத்திய தேடுதலில் கும்பல் அகப்பட்டுள்ளது.புகைப்படங்களில் காணப்பட்ட கீரோக்களது நிஜ புகைப்படங்கள் இவை. அவர்களின் ராஜபோக வாழ்வியலின் புகைப்படங்களையும் காணலாம்.
No comments